Categories
தேசிய செய்திகள்

எங்க வீட்டுல ஒரே ஒரு ரூம் தான் இருக்கு… அதான் இப்படி… மரத்தை வீடாக்கி தனிமையில் இருக்கும் இளைஞன்…!!!

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள இடம் இல்லாத காரணத்தினால் இளைஞர் ஒருவர் மரத்தில் கட்டிலை கட்டி தங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான சிவா என்ற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் படி, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் வீடு மிகவும் சிறிய அறை என்பதால் மற்றவருக்கும், கொரோனா தொற்று ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் வீட்டிற்கு முன் உள்ள அரசமரத்தில் கட்டிலை கட்டி வைத்து அதில் தங்கி வருகிறார். இதையடுத்து மரத்தின் மீது அவருக்கு வேண்டிய மருந்துகள், உணவு போன்றவற்றை குடும்ப உறுப்பினர்கள் நேரம் தவறாமல் அவருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

Categories

Tech |