Categories
உலக செய்திகள்

இஸ்ரேலின் தொடர் வான்வெளி தாக்குதல்.. காசாவில் குண்டு மழை.. பரபரப்பு சம்பவம்..!!

இஸ்ரேல், காசா மீது நடத்திவரும் வான்வெளி தாக்குதல்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் கடந்த ஒரு வாரமாக பயங்கரமான மோதல் வெடித்து வருகிறது. இதில் தற்போது வரை காசாவில் சுமார் 192 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேலில் சுமார் 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்சனையை தீர்வுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்திருக்கிறது.

எனினும் காசா மீது வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது. காசாவின் khan yunis என்ற பகுதியில் தான் வான்வெளி தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது இஸ்ரேலில் உள்ள Ashkelon, Ashdod மற்றும் BeerSheva போன்ற பகுதிகளில் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தது.

இதற்கு பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாதி தலைவர்களும், தளபதிகளுமே பொறுப்பு என்று அவர்கள் மீது குறிவைக்கப்பட்டு khan yunis பகுதியில் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |