Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேகத்தில் ஏறி இறங்கிய கார்… கோர விபத்தில் பறிபோன உயிர்… கோவையில் நடந்த சோகம்…!!

மோட்டர் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் பகுதியில் சந்தோஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சந்தோஷின் மொபட் மீது பலமாக மோதி விட்டது. அதன் பின் நிலை தடுமாறி கீழே விழுந்த சந்தோஷின் மீது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஏறி இறங்கியுள்ளது.

இதனால் படுகாயம் அடைந்த சந்தோஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |