Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணம்….? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

மன வருத்தத்தில் இருந்த இளம் பெண் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள தத்தனேரி கிராமத்தில் முனியசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் வேல்விழி படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேல்விழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் வேல்விழி எதற்காக இறந்தார்? என்பது குறித்து இன்னும் தெரிய வராத காரணத்தினால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |