காவல்துறையினர் கொரோனா நோய் பரவாமல் இருப்பதற்காக கையுறை மற்றும் முக கவசம் அணிந்து பணிபுரிகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டி காவல்துறையினர் நோய் தொற்றை தடுப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதன்படி காவல்துறையினர் எப்போதும் முக கவசம் மற்றும் கைகளில் கையுறைகளை அணிந்து பணியாற்றுகின்றனர்.
இதனையடுத்து காவல்துறையினரின் நோய்த்தொற்று கட்டுப்பாட்டு முறைக்கு போலீஸ் கமிஷனர் போன்ற உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து காவல்துறையினரும் இது போல் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.