ஊரடங்கு காரணமாக கடையை திறக்க மறுத்த உரிமையாளரை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள டீ.மேட்டுப்பட்டி கிராமத்தில் புவனேஸ்வரன் என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஊரடங்கு காரணமாக அவருடைய கடையை மூடி வைத்துள்ளார்.
அதே ஊரைச் சேர்ந்த ராம் குமார் என்பவர் கடையிலிருந்து சில பொருட்களை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு புவனேஸ்வரன் ஊரடங்கு என்பதால் கடையை திறக்க முடியாது என கூறியுள்ளார். அதற்கு ராம்குமார் புவனேஸ்வரனை அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த புவனேஸ்வரன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.