சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.427 கோடி சுழல்நிதி கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு கூட்டத்தில் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுய உதவி குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது, கிராமப்புற பகுதிகளில் மகளிர் குழுக்கள் அமைத்து சுயதொழில் தொடங்கி பொருளாதாரத்தில் பயன்பெறும் நிலை இருந்தது. இதுவரை அந்த மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி கடன் ரூ.427 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் குழுவில் ஒரு லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள்.
பிரதான தொழிலாக கிராமப்பகுதிகளில் விவசாயம் இருந்து வருகின்றது. விவசாய பணிகள் முடிந்த பிறகு மற்ற காலகட்டத்தில் கோழி, மீன் வளர்ப்பு, கறவை மாடு, ஆடு போன்றவற்றை வளர்த்து வருமானம் ஈட்டுகின்றனர். மேலும் மக்கள் மத்தியில் காரைக்குடி செட்டிநாடு பலகாரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோன்று வெளிமாவட்டங்களுக்கு உணவு பொருட்களை தயார் செய்து ஏற்றுமதி செய்யலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.