Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் தொடர் ‘ப்ளேயிங் லெவனில்’…. 5 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற வேண்டும் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர்…!!!

அடுத்த சீசன் ஐபிஎல் போட்டியில் கூடுதலாக 2 அணிகளுடன் ,மொத்தம் 10 அணிகள் இடம்பெற உள்ளது.

தற்போது நடைபெற்று உள்ள ஐபிஎல் போட்டிகளில் 8 அணிகள் இடம் பெற்று விளையாடி உள்ளது. இந்த 8 அணிகளில் ப்ளேயிங்  லெவனில், 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் விளையாடி வருகின்றனர். இதனால் போட்டியின் போது அணிகளில் முக்கியமான வீரர்கள், பங்கேற்க  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ப்ளேயிங் லெவனில்,  5 வெளிநாட்டு வீரர்களை விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு  நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில், 10 அணிகள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. எனவே இந்த தொடரில் ப்ளேயிங் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள் விளையாட வைக்க  வேண்டும் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். தற்போது வரை ப்ளேயிங் லெவனில் 7 இந்திய வீரர்கள் உட்பட ,56 வீரர்கள் இடம் பெறுவார்கள். ஆனால் 10 அணிகள் இடம்பெற்றால்  70  வீரர்கள் பங்கு பெற முடியும் என்றும் அப்போது 5 வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |