Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நேற்றைய நிலவரப்படி… சிறுவன் உட்பட 10 பேருக்கு… உறுதியான தொற்று பாதிப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் நேற்று மட்டும் சிறுவன் உட்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு நேற்று மட்டும் 10 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிங்கம்புணரி பண்டாரம் காலனி, காசிப்பிள்ளை நகர், வடக்கு தெரு, பாரதி நகர், என்பில்டு காலனி, வி.எஸ்.எஸ்.காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் கொரோனாவினால் 6 வயது சிறுவன் ஒருவனும் பாதிக்கப்பட்டுள்ளான். அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் வருவாய் துறையினரும், காவல்துறையினரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வெளியில் வரக்கூடாது, தங்களை தாங்கள் தான் வீட்டிற்குள்ளேயே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல், இருமல் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |