நடிகர் நிதீஷ் வீராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இயக்குனர் வெற்றிமாறன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றின் காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, ஆசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து நடிகர் நிதீஷ் வீரா இன்று காலை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரைப்பட பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர்.
இதை எடுத்து இவரின் மறைவிற்கு இயக்குனர் வெற்றிமாறன் ஒரு கண்ணீர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனாவால் எதிர்பாராமல் அவர் இறந்துவிட்டார். அவரின் மறைவு எதிர்பாராத ஒன்று. இரண்டு நாட்களுக்கு முன்பு நான் விசாரித்த போது கூட அவர் நலமுடன் இருக்கிறார் என்று தான் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை அவர் இறந்து விட்டதாக வந்த செய்தி மிகுந்த மன வருத்தத்தை தந்தது. கொரோனா கடந்த ஆண்டு தலை தூக்கியபோது இது சாதாரண ஒன்று என நானும் நினைத்தேன். இந்த ஆண்டு நெருக்கமான பல இழப்புகள் நேர்ந்து வருகின்றது. தயவு செய்து முக கவசம் அணியுங்கள். மூக்கிற்குக் கீழ் கவசம் அணியாதீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.