தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைத்தது. அப்போதிலிருந்தே பல்வேறு பதவிகளுக்கு உரிய நபர்களை நியமனம் செய்து வருகிறது. முதலில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம் செய்யப்பட்டார். அதன் பிறகு சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் திறன் மேம்பாட்டு கழக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மாநகராட்சி ஆணையர் பதவியில் சுகந்தி சிங் பேடி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆட்சியராக அனிஷ் சேகர், கடலூர் ஆட்சியராக பாலசுப்பிரமணியம், சேலம் ஆட்சியராக கார்மேகம், திருச்சி ஆட்சியராக சிவராசு, திருச்சி மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.