இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறையும் நிலையில் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்சி பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மக்களிடையே வலுப்பெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ததை தொடர்ந்து, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் 12 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று #modiji_cancel12thboards என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.