ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் பண்டிகை காலத்தை குறி வைத்து புதிய ஆஃபர்களை அளித்துள்ளது .
ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் எதிர்வரும் பண்டிகை காலங்களை முன்னிட்டு முதல் முறையாக எலக்ட்ரிக் வாகனங்கள் லைன்-அப்களை அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டுமின்றி ஓகினாவா நிறுவனம், இ-ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகையையும் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சலுகை வரும் அக்டோபர் 31ம் தேதி வரை மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இதுமட்டுமின்றி 20 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களும் குறிப்பாக , ஒருவருக்கு சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது .
இது குறித்து ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனர் பேசுகையில், எதிர்கால போக்குவரத்தானது எலக்ட்ரிக் வாகனங்களே பயன்படுத்த உள்ளது. மேலும், மத்திய அரசு பட்ஜெட் மற்றும் ஜிஎஸ்டி 7 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் வாடிக்கையாளர்களை எலக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் வாங்குவார்கள் என கூறினார் .
தொடர்ந்து பேசிய அவர், இ-ஸ்கூட்டர்களுக்கு தற்போது அதிக டிமாண்ட்கள் ஏற்பட்டுள்ளது என்றும் . இதனால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இ-ஸ்கூட்டர்களை கவரும் விலையில் விற்பனை செய்ய உள்ளதாகவும் மேலும் , விழாகாலங்களான சுந்திர தினம், ரக்ஷா பந்தன், நவராத்திரி, தசரா மற்றும் தீபவாளி போன்றவற்றை மனதில் கொண்டு எங்கள் வாடிக்கையாளர்களை எலக்ட்ரிக் டூ-வீலர்களை வாங்க ஊக்குவித்து வருகிறோம் என கூறினார்.
குறிப்பாக ஒகினாவா நிறுவனம் தனது வாகனங்களுக்கு விலையை குறைத்த அடுத்த நாளே புதிய சலுகைக்கான அறிவிப்பையும் வெளியிட்டது . இது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதம் குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த ஜிஎஸ்டி குறைப்பானது கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த ஒகினாவா லைன்-அப்கள் ரைடு மற்றும் பரடைஸ் ஸ்கூட்டர்களாக ஒருங்கிணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டர்கள் லீட் ஆசிட் மற்றும் லித்தியம் இயான் பேட்டரி ஆப்சன்களிலும் கிடைக்கிறது. மேலும் சர்மா அவர்கள் விழாகாலத்தை முன்னிட்டு எங்கள் வாடிக்கையாளர்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத மற்றும் விலை குறைவான எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தச் செய்வதே எங்கள் நோக்கமாகும் என்றும்,
இதன் மூலம் நாட்டின் எலக்ட்ரிக் போக்குவரத்துக்கு மாற்றும் திட்டத்தில் இணைய செய்வோம் என்றும் ஒகினாவா ஸ்கூட்டர்களை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் சலுகை கிடைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறோம் என்றும் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி விழாகால திட்டங்களுடன் ஜிஎஸ்டி விலை குறைப்பு போன்றவை இ-ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் அனுபவத்தை கொடுக்கும் என நம்புகிறோம் என்றும் ஷர்மா கூறினார். மேலும் ஒகினாவா நிறுவனத்தை தவிர மற்ற நிறுவனங்களும் விழாக்கால சலுகைகளை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கடந்த ஒன்பது மாதங்களாக ஆட்டோ தொழில்துறை மெதுவாக இயங்கி வருகிறது . இதனால் விழா காலத்தை எதிர்பார்த்து தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு டிமாண்ட் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.