சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் ஆகச் சிறந்த கதைசொல்லி எழுத்தாளர் கி. ராஜ நாராயணன் காலமானார். கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று அழைக்கப்பட்ட இவர் மறைவே ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பேரிழப்பு. கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள் மற்றும் ஏமாற்றங்களை இவரது எழுத்துக்கள் விவரித்தன. வாய்மொழிக் கதை சொல்லும் மரபின் கூறுகளை தனது படைப்பின் அடிப்படை அம்சங்களாக கொண்டிருந்தார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories