Categories
பல்சுவை

வெறும் 10 நிமிடங்கள் போதும்…. பான் கார்டு உங்கள் கையில்… எப்படி பெறுவது?… வாங்க பார்க்கலாம்…!!!

இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் அனைவரும் கட்டாயம் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். இதனை ஒரு பிளாஸ்டிக் அட்டை வடிவத்தில் இந்திய வருமான வரித்துறை வழங்கிவருகிறது. இந்திய குடிமகன் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியருக்கு, இந்திய அரசாங்கத்திடம் வரி செலுத்தினால், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், வியாபாரத்தில் ஈடுபட்டால் அல்லது ஏதேனும் ஒரு வகையில் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டால் அவரிடம் கண்டிப்பாக பான் கார்டு இருக்க வேண்டும்.

ஆனால் பான் கார்டு வாங்க விரும்புவோர் உரிய விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து நேரடியாக அல்லது இணையவழியாக சமர்ப்பித்தால் அது வீட்டிற்கு அனுப்பப்படும். ஆனால் அதற்கு சில நாட்கள் ஆகும். ஆனால் தற்போது ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு பத்து நிமிடங்களில் பான் கார்டு வழங்கப்படுகிறது. நீங்கள் ஆதார் கார்டு வைத்திருந்தால் மட்டும் போதும் உடனடியாக பான் கார்ட் பெற்று விடலாம். அதன்படி பத்து நிமிடங்களில் பான் கார்டு பெறுவது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.

1) e-PAN-ஐ உருவாக்க பயனர் முதலில் வருமான வரித்துறையின்
https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற வலைதளத்திற்கு செல்லவேண்டும்.

2) இங்கு உள்ள பல்வேறு வாய்ப்புகளில் “Instant PAN through Aadhaar” என்பதைக் க்ளிக் செய்யவும்.

3) விண்ணப்பதாரர் முன் ஒரு புதிய விண்டோ திறக்கப்படும். அதில் பயனர் “Get New PAN” என்பதைக் கிளிக் செய்யும்போது அடுத்த திரை திறக்கப்படும்.

4) இதில் பயனர் தம் ஆதார் அட்டை எண்ணை உள்ளிட வேண்டும்.

5) செயல்பாட்டைத் தொடர்வதற்கு, “Captcha Code” சரியாக நிரப்ப வேண்டும்.

6) I confirm that என்பதில் சரி(Tick) குறியிட்டு Generate Aadhar OTP என்பதைக் க்ளிக் செய்யவும்.

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எணுக்கு OTP எண் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.

7) OTP-ஐ தேவையான இடத்தில் நிரப்பிய பிறகு பயனர் தம் ஆதார் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.

8) அடுத்து தமது மின் அஞ்சல் முகவரியை நிரப்பித் தொடர வேண்டும்.இந்த படிநிலைகளுக்குப் பின் பயனரின் e-KYC தரவு e-PAN க்கு மாற்றப்படும்.

9) அதிகபட்சம் பத்து நிமிடங்களில் இந்த செயல்முறை முற்றிலுமாக முடிவடைந்துவிடும்.முழு செயல்முறையும் முடிந்ததும் 10 இலக்க PAN எண் உருவாக்கப்படும்.

10) இறுதியாக பயனர் தம் e-PAN கார்டை தம் மின்னஞ்சலில் (E-mail) Pdf வடிவத்தில் பெறலாம்.தம் ஆதார் அட்டை எண்ணை சமர்ப்பித்து e-PAN கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Categories

Tech |