Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திருமண விழாவின் போது… இரு தரப்பினரிடையே மோதல்… அரியலூரில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக திருமண விழாவில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குறவர் பகுதியில் கவிதா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரேம் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் சரண்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கும் பொய்யா நல்லூர் பகுதியில் வசிக்கும் மோகன்ராஜ்க்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரேம் என்பவருடைய திருமணமனது அவரது வீட்டிலேயே  நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு உறவினர்கள், சரண்ராஜ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதனையடுத்து திருமணத்தின் போது திடீரென சரண்ராஜூக்கும், மோகன்ராஜூக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டனர். இதனால் மோகன்ராஜூக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்  அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மோகன்ராஜின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் சத்யராஜ், சரண்ராஜ், மணிவேல், கார்த்தி, வினோத், மோகன் ஆகியோரை அடிதடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |