Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர்…. வெளிநாடு செல்ல தடை….!!

பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பெயர் வெளிநாடு செல்வதற்கான தடைவிதிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். இதனிடையே கடந்த மாதம் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதோடு மருத்துவ சிகிச்சைக்காக ஒரு முறை மட்டும் வெளிநாடு செல்லலாம் என்றும் மற்றபடி எக்காரணத்திற்காகவும் வெளிநாடு செல்லக் கூடாது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை தொடர்ந்து ஷெரீப் லண்டன் செல்ல லாகூர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த மத்திய புலனாய்வு படையினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் அரசு அவரை வெளிநாடு செல்வதற்கான தடைவிதிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.

Categories

Tech |