Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்த்த கனமழை…. வெள்ளத்தால் சிரமப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

கன்னியாகுமரியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை சரிசெய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான புயல் சீற்றத்தால் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இதனால் ஏராளமான மரங்கள் முறிந்து, மின் கம்பிகள் சாய்ந்ததால் அங்கு இருக்கக்கூடிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி போன்ற அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதன்பின் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேறியதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சப்பாத்து பாலம் மீது பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கனமழையால் முல்லையாற்றில் உடைப்பு ஏற்பட்டு வாழைத் தோட்டங்கள் மற்றும் ரப்பர் தோட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து இருந்தது. இதேபோன்று பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழையால் அந்தப் பகுதியில் இருக்கும் வீடுகள் மழை நீரில் சூழ்ந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்துள்ளனர். இதனையடுத்து மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சற்று கனமழை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன் பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்றபோது, பொதுமக்கள் மழைநீரை வெளியெற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அவர் விளவங்கோடு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் மூலம் மழைநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று  தெரிவித்துள்ளார். அதன்பின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று தேங்கிக் கிடந்த மழை நீரை வெளியேற்றி வந்துள்ளனர். அன்பின் அங்கு வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மேலும் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேறியதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.

Categories

Tech |