Categories
உலக செய்திகள்

ஆய்வில் தெரியவந்த உண்மை…. இந்த தடுப்பூசி புதிய கொரோனாவுக்கு எதிராக செயல்படும்…. அறிவிப்பு வெளியிட்ட இந்தியாவிற்கான ரஷ்ய தூதர்….!!

இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் ஸ்புட்னிக் தடுப்பூசி குறித்து தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.இதனிடையே  தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை கேவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் தற்போது ரஷ்ய ஸ்புட்னிக் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுக்குறித்து ரஷ்ய தூதர் குடாஷேவ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்புட்னிக் தடுப்பூசி மிகவும் செயல்திறன் உடையது என்றும் இது புதிய கொரோனா வகைகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது எனவும் கூறினார். மேலும் இது ரஷ்ய மக்களுக்கு போடப்பட்டுள்ள நிலையில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது என்றும் இந்தியாவிலும் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிப்பு தொடங்கவுள்ளது, இதில் ஆண்டிற்கு 850 மில்லியன் டோஸ் தயாரிக்கப்படும் எனவும் கூறினார்.

Categories

Tech |