அமெரிக்காவில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் கடந்த வாரம் 21 வயது இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்து இருக்கிறார். அப்போது எடார்டோ ப்ளோரிஸ் என்ற நபர் அவர் வீட்டின் கதவை தட்டி தங்கள் வீட்டில் உடை மாற்றி சென்று விடுவேன் என கூறியுள்ளார். இதனிடையே முன் பின் தெரியாத நபரை இளம்பெண் வீட்டிற்குள் அனுமதித்துள்ளார்.
இதனை தொடர்ந்து எடார்டோ ப்ளோரிஸ் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் எச்சரிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தற்போது எடார்டோ ப்ளோரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் மக்கள் இது போல முன் பின் அறிமுகம் இல்லாத எந்த நபரையும் வீட்டுக்குள் அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.