Categories
மாநில செய்திகள்

இ-பதிவில் மீண்டும் நீக்கம்…. குழப்பத்திற்கு மேல் குழப்பம்…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த வகையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருமணத்திற்கு அதிகம் பேர் விண்ணப்பித்து பயணம் செய்வதாக கூறி நேற்று அதற்கான அனுமதி இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இதனையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் இ – பதிவு இணையத்தளத்தில் திருமணத்திற்கான அனுமதி இன்று காலை சேர்க்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் திருமணத்திற்கான இ-பதிவு நீக்கப்பட்டுள்ளது. இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |