Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரொம்ப நாள் ஆகிருச்சு… இடி மின்னலுடன் பலத்த மழை… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கோடை காலம் என்பதால் வெப்ப சலனத்தால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை, ஆலங்குளம், சூரியூர், பேராம்பூர், நீர்பழனி மற்றும் மலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெயிலுக்கு மத்தியில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது.

இந்த மலை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்துள்ளது. இதனால் மழை நீர் அதிக அளவில் சாலைகளிலும், வயல்வெளிகளிலும் தேங்கி நின்றுள்ளது. இதனையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |