இ-பதிவு கட்டாயம் என்று போலீஸ் கெடுபிடியால் சென்னையில் ஒரே மாவட்டத்திற்குள் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் வாகனம் அனைத்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் செல்வதற்கு இ-பதிவு கட்டாயம் என அரசு அறிவித்ததைத் தொடர்ந்து மாவட்டங்களுக்குள் செல்லமுடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=3ZY3xSeOXew
இந்நிலையில் மாவட்டத்திற்குள் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன. மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் யாரும் எங்கேயும் செல்ல முடியாமல் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அரசு உடனே இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் பெரும் துயரம் நிகழும் எனவும் கூறப்பட்டுள்ளது.