நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, உதயா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Exclusive : #Maanaadu on-location stills! 📸#SilambarasanTR #AbdulKhaaliq@SilambarasanTR_ @kalyanipriyan @vp_offl @iam_SJSuryah @thisisysr @sureshkamatchi @Richardmnathan @silvastunt pic.twitter.com/Adh63VE3B1
— Silambarasan TR 360° (@STR_360) May 17, 2021
இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் மாநாடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் மாநாடு படப்பிடிப்பில் சிம்பு செம மாஸ் லுக்கில் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.