Categories
மாநில செய்திகள்

கி.ரா.மறைவு… ஈபிஎஸ் இரங்கல்…!!!

புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்துவந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன்(98 வயது) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர் என பல துறைகளைச் சார்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கி. ரா. மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கி. ரா. காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்தார். இவர் மட்டுமல்லாமல் பலரும் கி. ரா.மறைவுக்கு தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |