Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 232 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 232 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே தனியார் மருத்துவமனை, அரசு மருத்துமனை மற்றும் வீட்டு தனிமைகளில் தற்போது 1,561 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 172 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |