சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே 85 வயது மூதாட்டி கண்மாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வீழிமாத்தூர் கிராமத்தில் சேதுராணி ( 85 ) என்பவர் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் அருகே உள்ள கண்மாயில் கால் கழுவுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி தண்ணீரில் விழுந்துள்ளார். அதில் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் மூதாட்டியின் மகன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.