Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிச்ச படம் எல்லாம் முடங்கி கிடக்குது… சோகத்தில் நடிகை காஜல் அகர்வால்….!!!

சமீபத்தில் தான் நடித்த படங்கள் அனைத்தும் ரிலீஸாகாமல் இருப்பதால் காஜல் அகர்வால் சோகத்தில் உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். கடைசியாக இவர் ஜெயம் ரவியுடன் இணைந்து கோமாளி படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து காஜல் அகர்வால் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். இதில் இவர் நடிப்பில் உருவான பாரிஸ் பாரிஸ் படம் தணிக்கைக்குழு சர்ச்சையில் சிக்கி நீண்டகாலமாக வெளியாகாமல்  இருக்கிறது. இதேபோல் துல்கர் சல்மானுடன் ஹே சினாமிகா படத்தில் நடித்து வந்தபோது காஜல் அகர்வாலுக்கு தொழிலதிபர் கௌதம் கிச்சலுவுடன் திருமணம் முடிந்தது. திருமணத்திற்குப் பின் இந்த படத்தின் படப்பிடிப்புகளை காஜல் நிறைவு செய்தார். இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக இந்த படம் ரிலீஸாகாமல் இருக்கிறது. மேலும் கமல்ஹாசன்-சங்கர் கூட்டணியில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் காஜல் கதாநாயகியாக நடித்து வந்தார். ஆனால் தற்போது இயக்குனர் ஷங்கர் ஹிந்தி, தெலுங்கு படங்களை இயக்க சென்றுவிட்டதால் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை.

Kajal Aggarwal to debut on Netflix with a web series

நடிகை காஜல் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் காஜல் நடித்து வந்தார். விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர காஜல் 2 தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில பிரச்சனைகளால் இந்த படங்களும் முடங்கியுள்ளது . இந்நிலையில் தான் நடித்த படங்கள் அனைத்தும் முடங்கிக் கிடப்பதால் காஜல் அகர்வால் சோகத்தில் இருக்கிறாராம் . இவரின் படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |