வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வீரகேரளம் பகுதியில் வடவள்ளி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில் அங்கு கஞ்சா விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சக்திவேல் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.