ராணிப்பேட்டையில் ஊரடங்கு விதியை மீறி வாகனத்தில் சுற்றித்திரிந்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக தற்போது கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலிலுள்ளது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஊரடங்கு விதியை மீறி வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வையும் அவர்களுக்கு காவல்துறையினர் எடுத்துக் கூறினார். அதன்பின் விதிமுறையை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.