Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நிறைய பேர் வராங்க…. மாற்றினால் தான் நல்லது…. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

வேலூரில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் பார்த்திபனின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், உதவி சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், சுகாதாரப்பணி துணை இயக்குனர் மணிவண்ணன் போன்றோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து கலெக்டர் பார்த்திபன் பேசுகையில், வேலூரில் புதிய மீன் மார்க்கெட்டில் அதிகளவு மக்கள் கூட்டத்துடன் வியாபாரம் நடைபெறுகின்றது. இதனால் மீன் மார்க்கெட் அருகில் செயல்பட்டு வரும் சில்லரை மீன் கடைகளை ஆடுதொட்டி பஸ் நிலையத்திற்கு மாற்றி அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மீன் மார்க்கெட் அமைந்துள்ள இடத்திற்கும், சில்லரை மீன் கடைகளை மாறியமைக்க உள்ள இடத்திற்கும் அதிக தூரம் இல்லாததால் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படாது என்று அவர் தெரிவித்துள்ளார். அதோடு மீன் மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டமும்  குறைவாக காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |