உலகம் முழுவதிலும் இந்த வருடத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் ஏற்படும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏராளம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனாலும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மக்கள் தங்களை வீட்டில் இருந்து பாதுகாத்துக் கொண்டால் மட்டுமே கொரோனாவை நாம் ஒழிக்க முடியும். எனவே பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் வருகின்ற 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 21 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.