கேரளாவின் முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் வருகின்ற 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருடன் சேர்ந்து 21 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். அதில் இடதுசாரி ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நடந்து உள்ளது.
தற்போதைய சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா உட்பட ஏற்கனவே இருந்த எந்த அமைச்சருக்கும் புதிய அமைச்சரவையில் இடம் இல்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்திய அளவில் பிரபலமான கே.கே.சைலஜா இந்த அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இடம்பெறவில்லை என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.