அமெரிக்காவில் விமான நிலைய அதிகாரிகளின் சோதனையின் போது, இந்தியர் ஒருவர் மாட்டுச்சாணம் வைத்திருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்கட் விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனையின் போது, ஒரு இந்தியர் சிக்கியுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த பார்சலை பார்த்து சந்தேகமடைந்த அதிகாரிகள் அதனை திறந்து பார்த்திருக்கின்றனர். அதில் மாட்டுச்சாணம் இருந்துள்ளது.
இதனைக்கண்ட விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது அமெரிக்காவில் கால்நடைகளுக்கு ஒருவித தொற்று நோய், மாட்டுச்சாணம் மூலம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்கு மாட்டுச்சாணம் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் மாட்டுச்சாணம் உடலில் தேய்த்துக்கொண்டால் கொரோனோவிற்கு எதிராக எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று சிலர் நம்பி வருகிறார்கள். இதனை மருத்துவர்கள் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.