கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் காற்றில் பறக்க விட்டு பொதுமக்கள் சுற்றி திரிகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக காய்கறி, மளிகை போன்ற கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் குவிந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்று அதிகம் பரவ அபாயம் உள்ளதாக கூறி பல அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அதை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தி கொள்ளாமல் பொதுமக்கள் வெளியில் சுற்றுகின்றனர்.
இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் காலை 10 மணிக்கு மேல் மளிகை, காய்கறி, டீ போன்ற கடைகள் அடைக்கப்பட்டாலும் பொதுமக்கள் ஏராளமானோர் கொரோனா தடுப்பு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு வாகனங்களில் வெளியே செல்கின்றனர் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும் காவல் சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் வாகனங்களில் சென்றவர்களை எச்சரித்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் அனுப்பி வைத்துள்ளனர்.