Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. சுற்றித்திரிந்த வாலிபர்கள்…. எச்சரித்து அனுப்பிய காவல்துறையினர்….!!

வேலூரில் ஊரடங்கின் போது சுற்றித்திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டான் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் தேவையின்றி வெளியில் சுற்றி திரிந்தால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். மேலும் 20 க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து மூன்று மணி நேரத்திற்கு பிறகு வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டனர்.

Categories

Tech |