Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத அன்பு…. இறப்பிலும் இணை பிரியாத தம்பதி…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்….!!

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கரந்தை பகுதியில் மருதையா ஜெயா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் ஆரம்பத்தில் சமையல் வேலை செய்து வந்துள்ளனர். பின்பு வயது முதிர்வு காரணமாக அவர்கள் வேலைக்குச் செல்லாமல் தனது மகள் வீட்டில் தங்கி வசித்து வந்தனர். இந்நிலையில் ஜெயா வயது முதிர்வு காரணமாக சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதைப் பார்த்த மருதையா மிகவும் மனவேதனை அடைந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை ஜெயா திடீரென உயிரிழந்தார்.

இதனைக் கண்ட மருதையா அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து ஜெயா இறந்த தகவலை அவரது மகளுக்கு உறவினர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தார். அவர்களும் வந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருந்தனர். அதன்பின் மனவேதனையில் இருந்த மருதையா யாரிடமும் பேசாமல் மூச்சு பேச்சின்றி அப்படியே மயங்கி விழுந்துள்ளார். அவரை உறவினர்கள் எழுப்பியபோது அவர் இறந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத ஜெயா மருதையா தம்பதியினரின் உடலுக்கு இன்று இறுதி சடங்கு செய்துள்ளனர்.

Categories

Tech |