Categories
தேசிய செய்திகள்

குஜராத்தை அடித்து துவைத்த ‘டவ் தே’ புயல்…. அதிகாலை கரையை கடந்தது….!!!!

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புயலாக உருமாறியது. அவ்வாறு உருவான டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் – பாகுவா இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. புயலின் எதிரொலியாக கேரளா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன் காரணமாக கரையோர மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கரையோரம் இருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை குஜராத்தின் கடலோர பகுதிகளில் 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று, பலத்த மழையுடன் புயல் கரையைக் கடந்தது. அதனால் பல வீடுகள் சேதம் அடைந்து மின்கம்பங்கள், ஏராளமான மரங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரி செய்யும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மக்கள் அனைவரும் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டதால், பொதுமக்களுக்கு புயலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Categories

Tech |