Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி… வெளியே சுற்றிய நபர்களின்… 57 வாகனங்கள் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கொரோனா 2ஆம் அலை பரவலை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 51 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த 20 நபர்கள் மீதும், முகக்கவசம் அணியாமல் சென்ற 238 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அனாவசியமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த நபர்கள் மீது 59 வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களின் 57 இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், தவிர்க்கமுடியாத வேலைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் எனவும் இராமநாதபுரம் மாவட்டம் சூபிரண்ட் அதிகாரி கார்த்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |