பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகனின் ரசிகர்கள், இளவரசர் மைக்கேலின் பட்டங்கள் ஏன் பறிக்கப்படவில்லை என்று கொந்தளித்துள்ளனர்.
பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரும் அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து, பிரிட்டனை விட்டு வெளியேறி, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இதனால் அவர்களின் அரச குடும்ப பொறுப்புகளுக்கான பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் பிரிட்டன் மகாராணியின் உறவினரான இளவரசர் மைக்கேல் அரச குடும்பத்திற்கான அதிகாரத்தை தன் சுய லாபத்திற்காக பயன்படுத்தியிருக்கிறார். இதனால் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. எனினும் அவரது பட்டம் மற்றும் மாளிகையில் இருக்கும் அவரது வீடு பறிக்கப்படவில்லை. இதனால் இளவரசர் ஹரி மற்றும் மேகனின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
அவர்கள் கூறியுள்ளதாவது, இது மிக மோசமான செயல். இளவரசர் ஹரி மற்றும் மேகன் அரச குடும்பத்திலிருந்து விலகி, அமெரிக்காவில் குடியேறியதால் அவர்களது பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன. ஆனால் இளவரசர் மைக்கேல் மீது குற்றம் சாட்டப்பட்ட பின்பும் அவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.