புதுக்கோட்டை மாவட்டத்தில் தேள் கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கார்க்கமங்கலம் பகுதியில் முத்தழகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீஸ் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் பிரதீஸ் வீட்டில் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென சத்தம் போட்டு அலறியுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்த போது ஒரு தேள் பிரதீஸை கொட்டி விட்டு சென்றதை பார்த்துள்ளனர்.
இதனையடுத்து பெறோர்கள் பிரதீஸை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரதீஸ் பரிதாபமாக இறந்து விட்டார். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.