விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முத்துராமலிங்கம் நகர் பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி முத்துலிங்கம் நகர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஆறுமுகசாமி(46) என்பவர் தனது வீட்டின் பின் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் மது பாட்டில்களை விற்பனை செய்தது உறுதியாகியுள்ளது. மேலும் அவரிடம் இருந்த 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.