இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதமாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மட்டும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் இந்தியாவில் இருந்து யாரும் வரக்கூடாது என தடை விதித்துள்ளது. இந்தியா கொரோனா இரண்டாவது அலையில் அதிக அளவு பாதிக்கப்பட்டு இருப்பதால், மற்ற நாடுகள் அஞ்சுகின்றன.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலமாக உரையாற்றினார். அதில், கொரோனா பாதிப்பு பகுதிகளை கண்டறிவது, பரிசோதனை மற்றும் சரியான விவரங்களை மக்களிடம் சேர்ப்பதுதான் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய ஆயுதங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.