Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தண்ணீர் குடிக்க சென்ற தூய்மை பணியாளர்… பரிதாபமாக உயிரிழப்பு… விசாரணை நடத்தி வரும் போலீசார்…!!

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளியில் வேலைபார்க்கும் தூய்மை பணியாளர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டியில் உள்ள அருந்ததியர் காலனியில் குருசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளியில் சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்த குருசாமி அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தபோது திடீரென தவறி தொட்டிற்கு உள்ளே விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள  நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி குருசாமி உயிரிழந்துள்ளார். இதனைதொடர்ந்து குருசாமியின் மகனான முருகன்(22) காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சூலக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |