99 சாங்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை ஏ.ஆர். ரஹ்மான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் முதல் முதலாக கதை எழுதி தயாரித்து இசையமைத்த படம் 99 சாங்ஸ். இந்த படத்தில் இஹான் பட் கதாநாயகனாகவும் எடில்சி வர்கஸ் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
#99songsthemovieonOTT ..announcement tomorrow ….at 630pm!
— A.R.Rahman (@arrahman) May 18, 2021
கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி 99 சாங்ஸ் படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீஸானது. ஆனால் சில மாநிலங்களில் இந்த படம் வெளியான ஒரு சில நாட்களில் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நாளை மாலை 6:30 மணிக்கு 99 சாங்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும்’ என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.