Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை குழந்தைகளுடன் வொர்க் அவுட் செய்யும் பரத்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

நடிகர் பரத் தனது இரட்டை குழந்தைகளுடன் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பரத். இதையடுத்து இவர் காதல் படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் பழனி, வெயில், கண்டேன் காதலை, எம் மகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிகர் பரத் 4 தமிழ் படங்களிலும், 4 மலையாள படங்களிலும், ஒரு ஹிந்தி படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் நடிகர் பரத் ஜெஸ்லி என்பவரை காதலித்து கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில் நடிகர் பரத் தனது இரட்டை குழந்தைகளுடன் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |