இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள,உலகக் கோப்பை டி20 போட்டி நடத்துவதைப் பற்றி பிசிசிஐ ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
2021ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி கடந்த மாதம் தொடங்கி, நடைபெற்று வந்த நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு உலகக் கோப்பை டி20 போட்டி நடைபெற உள்ளது. போட்டி நடைபெற உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒருவேளை இந்தியாவில் உலக கோப்பை டி20 போட்டி நடத்த முடியவில்லை என்றால் , இந்தப் போட்டியை வெளிநாடுகளில் நடத்தப்படலாம். போட்டி தொடங்குவதற்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் தற்போதைக்கு எந்த ஒரு முடிவும் எடுக்கப்போவதில்லை. இந்நிலையில் பிசிசிஐ-யின் பொதுக்கூட்டமானது , வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவது பற்றி ,முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.