இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தலைநகர் டெல்லியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் நிதியுதவி மற்றும் கணவர் இறந்தால், மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும்,பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.