இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அது பெரும்பாலான மாநிலங்களில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமன்றி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் பலனாக இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் கொரோனா பரவல் மேலும் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கையில், பல மாநிலங்களில் ஏற்கனவே இருந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், மே 19ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.