Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்…. மாசுபடுத்தும் மர்மநபர்கள்…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!

கழிவுகளை சாலையோரத்திலும் நீர் நிலைகளிலும் கொட்டும் மர்ம நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான வேடப்பட்டி ஊராட்சியில் இருக்கும் சாலை ஓரங்களில் மர்ம நபர்கள் கழிவுகளை மூட்டையில் கட்டிக் கொண்டுவந்து அந்த இடத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். மேலும் இந்த கழிவுகளை வேடப்பட்டி மடத்துக்குளம் சாலையில் கொட்டி தீ வைத்ததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து இந்த கழிவுகளில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையை சுவாசிப்பவர்களுக்கு உடல் நலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கட்டிட கழிவுகளையும் மரக்கட்டைகளையும் கொட்டி வைத்துள்ளதால் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வேடப்பட்டி ஊராட்சி பகுதியில் எல்லைகளை இவ்வாறு மாசுபடுத்தும் மர்ம நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |